வெயிலுக்கு இதமாக குளு குளு பாதாம் பிசின்... நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா.?

நம்மில் பல பேருக்கு தெரியாத ஒன்றுதான் பாதாம் பிசின். இந்த பாதாம் பிசினில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது

பாதாம் மரத்திலிருந்து வடியும் பிசினில் இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது. இந்த பாதாம் பிசினை பயன்படுத்தி ஆயுர் வேதத்தில் அதிக விஷயங்கள் செய்து வருகிறார்கள்

இந்த பாதாம் பிசினில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதும், பாதாம் மரத்திலிருந்து வடியும் பிசினை உலர்த்தி இது தயாரிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு பழுப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும்

இந்த பாதாம் பிசின் புரோட்டின் சத்து அதிகமாக காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாதாம் பிசினை நம்ம ஊர் கடைகளில் தயாரிக்கப்படும் சர்பத், ஜிகர்தண்டா போன்ற பானங்களில் சேர்க்கப்படுகிறது

அதேபோல் இது பெண்களுக்கு ஏற்படும் மாதாவிடாய் பிரச்சனைகளுக்கும் நல்லது என்று சொல்கிறார்கள். இந்த பாதாம் பிசின் ரோமானியர்கள் காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது என்பதும் வரலாற்றில் ஒன்று

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

பாதாம் பிசினை உட்கொண்டு வந்தால் அதிகப்படியான புரதச்சத்து உங்கள் தசைகளை வலிமைப்படுத்தி எலும்புகள், தசைகள், தசை நார்கள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த உதவி செய்கிறது

இவ்வளவு மருத்துவ குணங்களை அடங்கியுள்ள இந்த பாதாம் பிசினை மக்கள் பயன்படுத்தி வந்தால் மக்கள் உடம்பில் இருக்கும் வியாதிகள் குணமாகும் என்பது இதனுடைய சிறப்பு அம்சமாகும்

மேலும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் இந்த பாதாம் பிசினை லட்டு ஐஸ்கிரீம்கள் போன்ற இனிப்புகளுக்கு மற்றும் குளிர்பானங்களில் சுவைக்காக பயன்படுத்துகின்றனர்