நுரையீரலின் நண்பன் நொச்சி இலை... ஏன் தெரியுமா.?
ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது
இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை. இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை
ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும்
நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது. நுரையீரலின் நண்பன் என்று சொல்லக்கூடியதுதான் நொச்சி இலைகள்
கொதிக்கும் நீரில், நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, இறுகி கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும்
வேப்பிலையை போலவே, இந்த இலையையும் நீரில் சேர்த்து குளித்து வந்தால், உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும்