சம்மரை சமாளிக்க தேனி மக்கள் விரும்பும் மஞ்சள் நிற தர்பூசணியின் மருத்துவ பயன்கள்.!
தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் சுட்டெரிக்கத் துவங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்திலும் கம்பம், சின்னமனூர், கூடலூர் என மாவட்டத்தின் பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது
இதனால் தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை விரித்து வியாபாரம் நடத்தி வருகின்றனர்
வழக்கமாக மே மாதம் கத்திரி வெயில் கடுமை காட்டும் நிலையில் தற்போது மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது
இதனால் கொதிக்கும் கோடை வெயிலைச் சமாளிக்க மக்கள் இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை நாடி வருகின்றனர்
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வழக்கமாகக் கிடைக்கும் சிவப்பு நிற தர்பூசணியில் இருந்து மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படும் மஞ்சள் நிற தர்பூசணிமக்களை அதிகம் கவர்ந்துள்ளது
மிதுலா, விலாசா ரகமான இந்த மஞ்சள் தர்பூசணி அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவையைக் கொண்டுள்ளதால் பொதுமக்கள் இந்த மஞ்சள் தர்பூசணியை அதிகம் விரும்பி சாப்பிடுவதாக தர்பூசணி கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்
வழக்கமான சிவப்பு நிற தர்பூசணி கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இந்த மஞ்சள் நிற தர்ப்பூசணி கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
சிவப்பு நிற தர்பூணியைப் போலவே உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் இந்த மஞ்சள் தர்பூசணி பல்வேறு மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த மஞ்சள் நிற தர்ப்பூசணியில் உள்ள பல்வேறு மருத்துவ பலன்கள் காரணமாக மக்கள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள்