ஹீமோகுளோபின் அளவு கட கடனு இன்க்ரீஸ் ஆகணுமா.? அப்போ இதை மட்டும் சாப்பிடுங்க.!

இரத்த சோகை அறிகுறிகள் மற்றும் இதனை தவிர்க்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் என்ன என்பது பற்றி புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவர் வனஜா விளக்கும் அளிக்கிறார்

இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்கள் அல்லது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு நிலை ஆகும்

ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசமாக இருக்கும்

ஆண்களுக்கு சராசரியாக 14.5 gm முதல் 15.5 gm, பெண்களுக்கு 13.5gm முதல் 14.5gm இருக்க வேண்டும், குழந்தைகளுக்கு 16 முதல் 17gm இருக்கும்

இந்த ஹீமோகுளோபின் அளவு குறைவதை வைத்து ரத்தசோகை எந்த நிலையில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம்

ஹீமோகுளோபின் 10 முதல் 11கி இருந்தால் அது லேசான ரத்த சோகை, 9 முதல் 10 கி ஆக இருந்தால் அது மிதமான ரத்த சோகை, 8 கிராமுக்கு கீழ் இருந்தால் அது தீவிர ரத்த சோகை என்பதை தெரிந்து கொள்ளலாம்

இந்த ரத்த சோகைக்கு அறிகுறிகள் என்னவென்றால் தோல் வெளிர் நிறத்தில் தோன்றும், மூச்சுத்திணறல், தலைசுற்றல், எப்போதும் சோம்பல் நிலை, பதற்றம், கை நகம் வெளிறிய நிறத்தில் காணப்படும் இது போன்றவை தான் இதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது

பொதுவாக பெண்களுக்கு இந்த ரத்த சோகை அதிக அளவில் ஏற்பட காரணம் பெண்கள் பருவமடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் இயல்பாகவே அதிக ரத்த இழப்பை சந்திக்கிறார்கள்

மேலும் தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தேவைக்கேற்ற இரும்பு சத்து எடுத்துக் கொள்ளாத போது ரத்த சோகை ஏற்படுகிறது

அத்துடன் பெண்கள் முறையான உணவுகளையும் பெரும்பாலும் எடுத்துக் கொள்ளாததனால் இது அதிக அளவில் பெண்களை பாதிக்கின்றது

இந்த ரத்த சோகையை தவிர்க்க கீரை அதிக அளவில் சூப்பாக எடுத்துக் கொள்ளலாம், அத்துடன் நெல்லி, தக்காளி, எலுமிச்சை, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, பாதாம் அத்தோடு தயிர் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்

மேலும் சரிவிகித உணவையும் எடுத்துக் கொண்டால் இந்த ரத்த சோகை குறைபாட்டை தவிர்க்க முடியும் என்றும் மருத்துவர் வனஜா தெரிவிக்கின்றார்

next

இறைச்சிக்கு இணையான சத்துக்கள் இந்த பலாப்பழத்தில் உள்ளன.!