மீண்டும் களைகட்டுமா  குற்றால சீசன்?

தமிழகத்தில் பல பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்தது

தென்காசி பகுதியில் உள்ள மேலகரம் ஒத்துக்கல்வலசை ஹவுசிங் போர்டு பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது

மேலும் குற்றால பகுதியில் பழைய அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மணி நேரம் கன மழை பெய்தது

குற்றால அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவை அடுத்து தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

தென்காசி மாவட்டத்தில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலையிலிருந்து மிதமான அளவு வெயில் இருந்து வந்த சூழலில் மதியத்திற்கு மேல் தென்காசி மற்றும் குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது

Stories

More

சிரிக்கவும் சிந்திக்கவும், வைக்கும் பொம்மலாட்டம்

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையா?

உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு இதுவா?

தற்போது தென்காசியில் மேகமூட்டத்துடன் குளுமையான வானிலை இருந்து வருவதை மக்கள் பலரும் ரசித்து வருகின்றனர். மேலும் அடுத்த சில நாட்களுக்கும் இதே வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது

திருக்குறளை எப்படி கேட்டாலும் சொல்வேன்… கோவை சிறுவனின் அசாத்திய திறமை.!