திருமண தடை நீக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இடுவாய் சித்தி விநாயகர் கோயில்.!

திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த பழமை வாய்ந்த விநாயகர் 5 தலைமுறைகளை கடந்து குளத்தேரி பகுதியில் இருந்துள்ளார்

பின்னர் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விநாயகருக்கு கோயில் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி, 1995ம் ஆண்டில் இடுவாய் ஊராட்சி மக்கள் இந்த சித்தி விநாயகருக்கு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தனர்.

இந்த கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வருடம்தோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை இந்த கோவிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை ஆண்டு விழா நடத்தப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் உள்ளூர் கிராம மக்கள் மட்டும் இன்றி வெளியூர்களை சேர்ந்த மக்களும் வருகை தந்து ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த சித்தி விநாயகர் கோவிலில் வேலை செய்யும் பூசாரிக்கு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து ஊதியம், காணிக்கைகளை வழங்குகின்றனர்.

இந்த சித்தி விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்ற ஒரு நம்பிக்கை காலம் காலமாக மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது

2000 ஆண்டுகள் பழமையான திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலின் வரலாற்று சிறப்புகள் தெரியுமா.?