அடேங்கப்பா...  நம்ம பல்லாவரம் சந்தையில் இந்த பொருட்கள் எல்லாம் கிடைக்குதா.?

சென்னை விமான நிலையம் எதிரிலுள்ள திரிசூலம் ரயில் நிலையம் அருகில் தொடங்கி, பல்லாவரம் ரயில் நிலையம் வரை சுமார் 6 கிலோமீட்டர் வரை உள்ளது பல்லாவரம் சந்தை.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே இயங்கும் என்பதால், வெள்ளிக்கிழமை சந்தை என்றும் கூறுகிறார்கள். சென்னையில் சந்தை என்பதே ஆச்சர்யமளிக்கும் விஷயம்.

இதில் 5 ரூபாய் காய்கறி கூறுகளில் தொடங்கி பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள் வரை இங்கு கிடைப்பது ஆச்சர்யத்தின் உச்சிக்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

சென்னை வாழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். 200 ஆண்டுகளுக்கு பழமையான பல்லாவரம் சந்தை முதலில் ஆங்கிலேயர்கள் மாட்டுச் சந்தையாக நடைபெற்று வந்து உள்ளது.

அதன் பின் காலப்போக்கில் பழைய மற்றும் புதிய பொருட்களின் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளது. 

சந்தைக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கும் விதமாக முதலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது பசுமை நிறைந்த பூச்செடிகள்தான்.

இச்சந்தையில் பழைய பொருட்களுக்கு மிகவும் பிரபலமானது. அதில், பழைய கணினிகள், செல்போன், உதிரிபாகங்கள், வீட்டில் பயன்படுத்தக்கூடிய மேசைகள்,

பழைய பொருட்களைத் தாண்டி புதிய பொருட்களும், காய்கறிகள், பூச்செடிகள், வீட்டு உபயோக பொருட்கள், செல்லப் பிராணிகள், மளிகை பொருட்கள் என அனைத்து பொருட்களும் கிடைக்கக்கூடிய இடமாக திகழ்கிறது. 

விவசாயிகளுக்குத் தேவையான அரிவாள், சமையலறை கத்தி, கதிர் அரிவாள், தொரடு கொக்கி, மண்வெட்டி, கடப்பாரை அனைத்தும் கிடைக்கின்றன.

சாப்பிடும் வகைகளுக்கும் பஞ்சமில்லை, அதில் அடிக்கிற வெயிலுக்கு இதம் தரும் விதமாக கரும்புச்சாறு, ஐஸ்கிரீம், இளநீர், கோலி சோடா, பாதாம் உள்ளிட்டவை கிடைக்கின்றன

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல் பணக்காரர்களும் கார்களில் வந்து வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி செய்கின்றனர். 

இதற்கு இங்கு விலை மிகவும் மலிவாகக் கிடைக்கும் என்பதே காரணம். 

சென்னை சுற்றுவட்டாரத்தில் அனைத்து பொருட்களும் கிடைக்கக் கூடிய ஒரே இடமாக பல்லாவரம் சந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மசினகுடி எனும் மலை கிராமத்தின் அழகு.. நீலகிரியில் இப்படி  ஒரு ஊர் இருக்கா.?