கை உடைந்ததால் ஒதுக்கப்பட்ட அங்காளம்மன்... அதற்கு பின் என்ன நடந்தது தெரியுமா.?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எரகுடியில் அமைந்துள்ளது பெரியாண்டவர், அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக சொல்லப்படுகிறது

தற்பொழுது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம், சாப மோட்சம் தரக்கூடிய ஸ்தலமாக இந்த கோயில் அமைந்துள்ளது

முன்னதாக இங்கிருந்த அங்காளம்மன் சிலை கை உடைந்ததால் ஒதுக்கப்பட்டு, தூக்கிப்போட்டதாகவும் கடவுள் சாபத்தால் அங்கு பிறந்த ஒன்பது குழந்தைகளும் கை ஊணத்துடன் பிறந்ததாகவும் கூறப்படுகிறது

அதற்குப் பிறகு கை உடைந்த அம்மனை எடுத்து வழிபாடு செய்தனர். பின் அனைத்து சிக்கல்களும் தீர்ந்ததாக கூறப்படுகிறது

இங்கு பால கணபதி, பாலமுருகன், அங்காளம்மன், மதுரைவீரன், பெரியாண்டச்சி, சடச்சியம்மன், சித்தநாதர், பேச்சியம்மன், இருளப்பன், பாவாடைராயன் ஆகிய கடவுள் சந்நிதிகள் உள்ளது

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

இங்கு பௌர்ணமி பூஜையே பிரதானமாக இருக்கிறது. பெரியாண்டச்சி அம்மனுக்கு பூசணிக்காய் விளக்கு ஏற்றி மஞ்சள் மாங்கலியம் வைத்து வழிபட்டால் தாலி பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசாணி அம்மனுக்கு விரதம் இருந்து பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் கோயில் அர்ச்சகர் தெரிவித்தார்

காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்