கன்னியாகுமரி அவ்வையார் அம்மன் கோயிலின் சிறப்புகள்.!

நாகர்கோவில் அருகே இயற்கை எழில் சூழ்ந்த தாழக்குடி பகுதியில் அமைந்திருக்க கூடிய அருள்மிகு ஔவையார் அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத வழிபாட்டில் சிறப்பு பெற்றது.

தமிழ் மூதாட்டி பெண் புலவர் ஆத்திச்சூடி தந்த அவ்வையார் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டு ஆடி மாதத்தில் பெண்கள் அம்மனுக்கு விரதம் இருந்து கொழுக்கட்டை பிரசாதம் படைத்து வழிபட்டு வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிக பெண் பக்தர்கள் இங்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றார்கள்.

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த அன்னையை விரதமிருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு நோய் நொடியில் இருந்து காத்தும் குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை வரம் அருளையும்

பணக்கஷ்டங்களில் தவிக்கும் மக்களுக்கு அதிலிருந்து நிம்மதி அளித்தும் வாழ்வில் வளம் பெருக செய்கிறாள் என்பது இவர்களின் நம்பிக்கை

அது மட்டுமல்ல முருகப்பெருமான் தமிழ் மூதாட்டி அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என திருவிளையாடல் நிகழ்த்திய இடமாக இது கருதப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு சான்றளிக்கும் விதமாக அவ்வையார் அம்மனுக்கு இங்கு ஒரு ஆலயமும் அதன் அருகே குளமும் குளத்தின் கரையில் நாவல் பழ மரமும்

சற்று மேலே நடந்து சென்றால் சிறிய குன்றின் மீது முருகப்பெருமானும் அருள் புரிவது இந்த நிகழ்வை உணர்த்துகிறது.

“அன்பாலே அழகாகும் வீடு” 220 வருடமாக கூட்டு குடும்பமாக வாழும் மக்கள்.!