திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மிகவும் பழமையான ராமர் கோயில் உள்ளது.இங்கு சீதா, லட்சுமணன், ராமர், அனுமன் ஆகியோர் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்
மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தோளுக்கினியான், பல்லக்கு, புன்னகை மர வாகனம், அனுமந்த வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம்,
கருட வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், சந்திர பிரபை வாகனம் போன்றவற்றில் தினமும் ராமசுவாமி எழுந்தருளி வீதிகளில் உலா வருவது மிகவும் பிரசித்தி பெற்றது
இதனைப் பார்க்க திருநெல்வேலி மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள்
இந்த கோயில் சிறப்புகள் குறித்து பட்டாச்சார் கோவிந்தராஜன் கூறுகையில், “ராமர் கோயிலுடன் தெப்பக்குளமும் இருப்பது விசேஷம். பக்தர்களின் வேண்டுதல்களை வேண்டிய படி ராமர் நிறைவேற்றி வைக்கிறார்
மாசி திருவிழா கோலாகலமாக நடக்கும். அந்த திருவிழா முடிந்தவுடன் தெப்பத் திருவிழா நடக்கும். 13 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. தற்பொழுது மீண்டும் நடைபெற உள்ளது
கோயிலின் தெப்பக்குளத்தை பக்தர் ஒருவர் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் சீரமைத்துள்ளார். இதனால் தற்போது பெய்த கன மழையால் வறண்டு இருந்த தெப்பக்குளம் தண்ணீரில் நிரம்பியுள்ளது. அருமையான கோயிலாக இன்று வரை விளங்கி வருகிறது
ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். முக்கியமாக குழந்தை பாக்கியத்தை ராமர் பக்தர்களுக்கு கிடைக்க செய்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து ராமரை தரிசித்தால் நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என தெரிவித்தார்