விருதுநகரில் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில்.!

விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே அதிகம் காணப்படும் நிலையில், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் ஒரு குடைவரை கோயில் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

குடைவரை கோயில் என்பது கட்டுமானங்கள் ஏதும் இன்றி மலையை குடைந்து கட்டப்பட்ட கோவிலை குறிக்கும். திருமங்கலம் ராஜபாளையம் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அடுத்துள்ள ஊர் தான் மூவரை வென்றான்

மூவரை வென்றான் கிராமத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் சிறிய அளவிலான குன்று இருப்பதை காணலாம் அங்கு தான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைப்பை பொருத்தவரை, கோவில் ஒரு மலையை குடைந்து கட்டப்பட்ட குடவரை கோவில்

முன்பு இருக்கும் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மட்டுமே கற்களை கொண்டு கட்டப்பட்டது. மற்றபடி கருவறை முழுவதும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. மூலவராக சிவன் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு காட்சி தருகிறார்

கருவறையை ஒட்டிய பக்கவாட்டு பகுதியில் இடது பக்கத்தில் விநாயகர் சிற்பமும், வலது பக்கத்தில் ராஜ கோலத்தில் உள்ள முருகன் சிற்பம் மற்றும் நடமாடும் நடராஜரின் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளன

கோவிலுக்கு வெளியே மரகதவல்லி அம்மன், தட்சிணா மூர்த்தி, முருகன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர். மூவரை வென்றான் கோவில் என்று அறியப்பட்டாலும் இதனை மக்கள் மொட்டமலை என்கின்றனர்

கோவில் வரலாற்றை பொருத்தவரை கோவில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவில் தூண்களில் காணப்படும் சிங்கங்களை வைத்து கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்கின்றனர்

ஆனால் கருவறையில் உள்ள சதுர ஆவுடை கொண்ட லிங்கத்தை வைத்து இது பாண்டியர் கால கோவில் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

அப்படி என்றால் பல்லவர்களின் சின்னமான சிங்கங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள் இங்கு எப்படி வந்தது? கோவிலுக்கு முன்புறம் உள்ள மகா மண்டப வெளிப்புறத்திலும் சிங்கங்கள் உள்ளன

ஆனால் அவற்றின் ஒழுங்கற்ற அமைப்பினை வைத்து, பார்க்கும் போது இந்த கற்தூண்கள் வேறு இடத்தில் உள்ள கோவிலை இடித்து கொண்டு வந்து இங்கு கட்டப்பட்டு இருக்கலாம் என அறியப்படுகிறது

எல்லாவற்றையும் விட கவனிக்க வேண்டியது மலைக்கு மேல் உள்ள சுனை தான் , சுனையில் உள்ள நீரை சிவனுக்கு அபிஷேகம் செய்ய கொண்டு வர சுனையில் இருந்து கோவில் கருவறை வரை கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு பாறையை வெட்டி பாதை அமைத்துள்ளனர்

அந்த சுனையில் வரும் நீர் இன்றும் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்பட்டு வருகிறது. அழகான இயற்கை அமைப்பில் மலையின் மீது உள்ள இந்த மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலுக்கு வாய்ப்பு இருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்