வடமாநில பக்தர்களை கவரும் ராமர், லட்சுமணர் தீர்த்தம்... ராமநாதபுரத்தில் மிஸ் ண்ணக்கூடாத இடம்.!

ராமநாதபுரம் மாவட்டமானது ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த காணப்படும் ஒரு நாட்டில் உள்ள முக்கிய ஆன்மீக ஸ்தலமாகும்

இங்கு மாவட்டத்தினை சுற்றிலும் 108 தீர்த்தங்கள் இருந்தது எனவும், ராமநாதசுவாமி கோவில் உள்ள 12 தீர்த்தங்கள் உட்பட ராமேஸ்வரத்தில் மட்டும் 64 தீர்த்தங்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் சில அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

இதில் ராமர் உருவாக்கியது ராமர் தீர்த்தம். லெட்சுமண உருவாக்கியது லெட்சுமண தீர்த்தம். ராமர் தீர்த்தமானது ராமநாதசுவாமி மேற்கு கோபுர வாசலில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

ராமர் ராவணனை போரில் வென்ற பிறகு தனது பாவங்கள் போக்க உருவாக்கப்பட்டது. மேலும், பொய் பேசியதால், தர்மர் துரோணாச்சார்யாவைக் கொள்கிறார்.

தனது குருவைக்கொன்ற பாவத்தை போக்குவதற்காக வியாச மகரிஷியின் ஆலோசனைப்படி ராமர் தீர்த்தத்திற்கு சென்று குளித்ததால் பாவங்கள் நீங்கியதாக புராணங்கள் கூறுகின்றன

லெட்சுமணன் தீர்த்தம் ராமர் தீர்த்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அருகிலேயே அமைந்துள்ளது

ராவணனை வென்ற போரில் தனக்கு ஏற்பட்ட பாவங்கள் போக்க இந்த தீர்த்தத்தினை உருவாக்கி நீராடினார் லெட்சுமணர்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

இதில் லட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் இருக்கும் கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்கள் வழிபட்டு தீர்த்தநீரை தலையில் தெளித்து செல்வார்கள்

இந்த இரண்டு தீர்த்தங்களும் காலை 6 மணிமுதல் மாலை 8 மணி வரியிலும் திறந்திருக்கும். ராமேஸ்வரத்திற்கு வரும் வடமாநில பக்தர்கள் இங்கு செல்லாமல் இருப்பது கிடையாது

இந்த இரண்டு தீர்த்தங்களையும் கண்டு நீராடி வழிபட்டு தங்களது பாவங்களையும் போக்கி செல்லுங்கள்