தஞ்சையிலும் திருச்செந்தூர் முருகனை காணலாம்... இந்த கோயில் எங்கு உள்ளது தெரியுமா.?

1857 ஆம் ஆண்டு திருச்செந்தூரை சேர்ந்த துறவி ஒருவர் முருகன் சிலையை தினந்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்துள்ளார்

அப்போது தனது இறுதி நாட்கள் நெருங்கி வருவதை உணர்ந்த துறவி எனக்கு அடுத்தபடியாக உன்னை வழிபட ஒருவரை என் கண்ணில் காட்டுமாறு முருகனுக்கு கோரிக்கை வைத்தார்

அதன் பின்னர் துறவியின் கனவில் வந்த முருகன் நீ என் பக்தர் ஒருவரிடம் என்னை சேர்த்து விடு அவர் என்னைப் பார்த்துக் கொள்வார் என்று கூறி அந்த பக்தனின் அடையாளங்களை கூறி மறைந்தார்

தஞ்சாவூரில் இருந்து திருச்செந்தூரில் வேலை பார்த்து வரும் பக்தர் ஒருவரின் கனவில் சென்று துறவி ஒருவர் உன்னிடம் என்னை கொடுப்பார் நீ தஞ்சையில் பூக்கள் நிறைந்த பூக்கார தெருவிற்கு என்னை கொண்டு சேர்த்து விடு என பக்தனிடமும் கூறியுள்ளார்

இதனை உணர்ந்த பக்தன் திருச்செந்தூர் கோயில் சென்ற போது முருகன் சொன்ன அடையாளங்களை வைத்து தஞ்சாவூர் பக்தனிடம் சிலையை ஒப்படைத்து திருச்செந்தூர் ஆலயம் சென்று துறவி மறைந்தார்

பின்னர் துறவியிடம் பெற்ற சிலையை கொண்டு வந்து பூக்காரத் தெரு முருக பக்தர்களிடம் நடந்தவற்றை கூறி கூறை அமைத்து அவரோடு சேர்ந்து பலர் வழிபட ஆரம்பித்தனர்

இந்த நிலையில்‌ தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீமான் ராவ்பகதூர் சீனிவாசன் பிள்ளை நேரில் வந்து தனது இடத்தில் அமர்ந்து இருந்த முருகனை கேட்டு அறிந்து திருச்செந்தூரில் இருந்து வந்த சுப்ரமணிய சுவாமி பெயருக்கு தனது இடங்களை தானமான கொடுத்துள்ளார்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

அதன்பின்னர் 1911-ம் ஆண்டிலிருந்து இந்த 2001-ம் வரை குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது

அதனையடுத்து 22 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் பல லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இக்கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது

இக்கோயில் பிரகாரத்தில் விநாயகர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஸ்ரீ துர்க்கை இடும்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளது

ஆறுபடைகளில் நடக்கும் விசேஷ நிகழ்வுகள் போல இக்கோயிலும் ஆண்டு தோறும் பல்வேறு வகையான விழாக்கள் நடைபெற்று வருகிறது

திருச்செந்தூரில் இருந்து வந்த முருகன் என்பதால் திருச்செந்தூருக்கு செல்ல முடியாதவர்கள் பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது