உணவு பொருட்களில் கலப்படம் கலந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கலாம்.?  விளக்கும் அதிகாரி.!

விழுப்புரம் மாவட்டம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்புத் துறை மூலம் உணவுகளில் கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு ஸ்டால் அமைக்கப்பட்டது

இந்த விழிப்புணர்வு ஸ்டாலை பள்ளி மாணவிகள் ஆர்வமாக கண்டுகளித்தும், உணவுகளை கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து மாணவிகளுக்கு எழுந்த சந்தேகத்தை கேட்டு அறிந்து கொண்டனர்

நாம் தினமும் பயன்படுத்தும் எண்ணெய், டீ தூள், மிளகு, ஜீரகம் உள்ளிட்ட உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. இதனால், உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகிறது. இதனால், உணவுக்கலப்படத்தை பொதுமக்களே எப்படி கண்டுபிடிப்பது?என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

இதுகுறித்து அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, “முதலில் பொதுமக்கள் காலையிலும் மாலையிலும் அருந்துவது டீ தான். அதில் கலப்படம் இருப்பதை எப்படி கண்டுபிடிக்களாம் அதாவது, ஒரிஜினல் டீ தூளை தண்ணீரில் கலந்தால் நிறம் எதும் வராது

ஆனால், கலப்படம் கலந்த டீ தூளை தண்ணீரில் கலந்தால் உடனடியாக நிறம் மாறும். அதாவது, தண்ணீரானது சாயத்தின் கலரில் மாறியிருப்பது தெரியும். அப்படியிருந்தால் அது கலப்படமான டூப்ளிகேட் டீ தூள் என்று அர்த்தம்” என்றவர்கள் அதை செய்து காண்பித்தார்கள்

அடுத்து, மக்கள் அன்றாட வாழ்வில் உபயோகிக்க படும் தேனில் கலப்படம் எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்று டெமோ செய்து காண்பித்தார்கள். தேனை தண்ணீரில் ஊற்ற பாத்திரம் அடியில் தங்கும். ஆனால், சர்க்கரை பாகு கலந்த தேனை தண்ணீரில் கலந்தால் உடனடியாக தண்ணீரில் கரைந்துவிடும் என்றவர்கள்

மக்கள் உபயோகப்படுத்தும் பச்சை பட்டாணி, எண்ணெய், நெய், ஆப்பிள், பட்டை, மஞ்சள் தூள், சோம்பு, ஜாங்கிரி, வெல்லம் போன்ற அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் உள்ளது

இதனை, சரியான முறையில் மக்கள் கண்டறிந்து தங்களுக்கு தேவையான சுத்தமான உணவு வகைகளை வாங்க வேண்டும் என மக்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

Stories

More

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு இங்க இருந்து தான் தண்ணி வருதா

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

பாரதியார் பயின்ற வகுப்பறையின் சிறப்புகள் உங்களுக்கு தெரியுமா?

எந்தப் பொருட்களை வாங்கினாலும் அதனை வீட்டிலியே பரிசோதிக்க மக்கள் முன் வந்தால்தான் கலப்படம் ஒழிக்கப் படும்

மேலும், https://www.fssai.gov.in/(Food safety and standards authority of India) என்றவெப்சைட்குள் சென்றால் தேவையான உணவு பரிசோதனை வீடியோக்கள் இருக்கும். இதனைப்பார்த்தும் கற்றுக்கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

எட்டாத உயரத்தில்… குகைகளுக்கு நடுவே அமைந்துள்ள அதிசய சிவன் கோவில்.. எங்க இருக்கு தெரியுமா.?