சுருளி அருவியில் இப்போது நீர்வரத்து எப்படி இருக்கு.?

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து நீராடி மகிழ்வது வழக்கமாக உள்ளது

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விடுமுறை நாட்களில் தடை விதித்து சுற்றுலா பயணிகள் அனைவரையும் வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்

தற்போது மழைப்பொழிவு குறைய தொடங்கியதால் சுருளி அருவியில் நீர்வரத்து சீராக இருந்து வருகிறது. அருவி பகுதியில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிப்பகுதியில் குளிப்பதற்கு வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர்

Stories

More

சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு எந்த பண்டிகை தெரியுமா?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

பொன் மகன் சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா?

அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பணிகளை அனுமதித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

மேலும் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மரவள்ளி கிழங்கு சாகுபடியில் இவ்வளவு லாபம் கிடைக்குமா.?