மரவள்ளி கிழங்கு சாகுபடியில் இவ்வளவு லாபம் கிடைக்குமா.?

பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் மரவள்ளிக்கிழங்கு நடவு செய்யலாம். இருப்பினும் மானாவாரியில் மே - ஜூன் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடிசெய்ய ஏற்ற பருவகாலங்கள் ஆகும்

செம்மண், கரிசல் மண் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்ய ஏற்றது. மண்ணில் தழைச்சத்து அதிகம் இருக்கவேண்டும் அப்படி இருந்தால் கிழங்குகள் நன்றாக வளரும்

விழுப்புரம் மாவட்டத்தில் செங்காடு, இளங்காடு, குச்சிபாளையம், கோணங்கிபாளையம் போன்ற பல பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் ரோஸ் மரவள்ளி கிழங்கு, முள்ளுவாடி மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது

முள்ளுவாடி மரவள்ளிக்கிழங்கு ஒரு வருட காலப் பயிராகும். தற்போது ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது எனவும் ஒரு டன் 10,000 ரூபாய் வரை விலை போகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்

இந்த மரவள்ளி கிழங்குகள் அதிகளவில் ஆலைகளுக்கு தான் அனுப்பப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து சிப்ஸ் மாவு, ஜவ்வரிசி என அனைத்தும் தயாராகிறது. ஒரு கிழங்கு குறைந்தபட்சம் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை இருக்கும்

மேலும் இந்த மரவள்ளி கிழங்கிலேயே தோல் ரோஸ் நிறத்திலும் கிழங்கு வெள்ளை நிறத்திலும் இருக்கும். இந்தக் கிழங்கு பெயர் ரோஸ் மரவள்ளி கிழங்கு. இந்தக் கிழங்கு தான் அதிக அளவில் பொதுமக்கள் சுவைத்து சாப்பிடுவார்கள்

இந்தக் கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தற்போது மரவள்ளிக்கிழங்குகள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக பல ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது

Stories

More

மதுரையின் டாப் 3 டூரிஸ்ட் ஸ்பாட் இதோ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..!

விவசாயிகளும் உள்ளோர்களிலேயே மரவள்ளி கிழங்குகளை சாகுபடி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் நல்ல லாபம் தான் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்

கொலு இப்படி தான் வைக்க வேண்டும்.!