இந்தியாவில் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் திகழ்கிறது.
அரசு ஆவணங்கள், திட்டங்கள் மற்றும் வங்கி சேவைகளுக்கு ஆதார் தேவைப்படுகிறது.
ஆதார் அட்டையில் ஒருவரின் தகவல்கள் அப்டேட்டாக இருக்க வேண்டும்.
ஆதாரில் இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை ஆன்லைனில் மாற்ற இயலாது. சேவை மையத்திற்கு நேரடியாக சென்றுதான் புகைப்படத்தை அப்டேட் செய்யவேண்டும்.
ஆதார் சேவை மையத்திற்கு சென்று, என்ரோல்மெண்ட் படிவத்தில் புகைப்படத்தை மாற்ற கோரிக்கை விடுத்து, ஆதார் தகவல்களை நிரப்பி கொடுக்க வேண்டும்.
புகைப்படத்தை மாற்றம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்
ஆதார் சேவை நிர்வாகி உங்களுடைய தற்போதைய புகைப்படத்தை எடுத்துகொள்ளுவார்.
புதிய புகைப்படத்துடன் கூடிய அப்டேட் செய்யப்பட்ட ஆதார் 10 முதல் 14 நாட்களில் கிடைக்கும்.
ஆதாரின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து புதிய ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.