ஒரு கிளிக் போதும்.... வீட்டில் இருந்தே பட்டாவை ஈஸியா மாற்றலாம்... எப்படினு தெரிஞ்சுக்கோங்க.!

முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் இ - சேவை மையத்திற்கோ அல்லது தாலுகா அலுவலகத்திற்கோ சென்று தான் பட்டா மாறுதல் செய்ய முடியும்

ஆனால் தற்போது இணையதள வசதியுடன் இருக்கும் இடத்திலிருந்து பட்டா மாறுதல் செய்ய முடியும். அது குறித்த முழுமையான விளக்கத்தை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய tamilnilam.tn.gov.in என்ற இணையதள சேவையை அரசு அறிமுகம் செய்து உள்ளது

இந்த இணையதளத்திற்கு சென்றவுடன் முதலில் உங்களது பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்

அதன்பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்

அதன்பின் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும்

அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்

அதனைத்தொடர்ந்து இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானது என்பதற்கான சான்றாக கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்

அதன்பின் உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்வார்கள்

next

உஷார்… முன்பின் தெரியாதவர்களுக்கு டிரெயின் டிக்கெட் முன்பதிவு செய்தால் ₹10,000 அபராதம்.!