ஒருசில ஹோட்டல்களில் உணவு தரமில்லாத பொருள் கொண்டு சமைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது கெட்டு போய் இருக்கலாம். இந்த நேரத்தில் ஒரு வாடிக்கையாளராக கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளது
மேலும் இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு துறையில் புகார் செய்யலாம். ஆனால் பெரும்பாலோர் அதற்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டும் என தவிர்த்து விட்டு செல்கின்றனர்
தற்போது புகார் தெரிவிக்கும் வழிமுறையை எளிதாக்கி உணவுப் பாதுகாப்பு துறை ஒவ்வொரு வாடிக்கையாளரும் இணையதளம் வாயிலாக புகார் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது
ஒரு உணவகத்தின் மீது புகார் தெரிவிக்க உணவகத்தின் சரியான முகவரி, உணவின் தரம் குறித்த புகாரின் ஆதாரத்திற்கு புகைப்படங்கள், அந்த உணவக பில் போன்றவை கட்டயாம் தேவை
புகார் அளிக்க www.foodsafety.tn.in/register என்ற வலைத்தளத்தில் சென்று முதலில் நம் மொபைல் எண், இ- மெயில் கொடுத்து அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். பின்னர் பாஸ்வோர்ட் கொடுத்து லாகின் செய்து புகார் செய்ய தொடங்கலாம்
புகாரில் உணவகத்தின் முகவரி, அது எந்த மாதிரியான உணவகம், எந்த மாதிரியான உணவு மீது புகார் செய்ய போகிறோம், என்ன புகார் போன்ற தகவல்களை கொடுத்து
அதற்கு ஆதாரமாக நாம் எடுத்து வைத்துள்ள புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்து புகாரை சமர்பிக்க வேண்டும்
புகாரை சமர்பித்த பின்னர் அதே வலைத்தளத்தில் சென்று புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஒருவரிடம் பேசிய போது, தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்க இது தான் சிறந்த நடைமுறை, அதிகபட்சம் புகார் தெரிவித்த 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ரத்து.!