1 கப் அரிசி மாவு 1-1/2 கப் தண்ணீர் 1 டீஸ்பூன் எண்ணெய் சுவைக்கேற்ப உப்பு தாளிக்க தேவையானவை : எலுமிச்சை சாறு - 1 பெரிய பழம் 1/4 கப் வறுத்த வேர்க்கடலை 1 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1 டீஸ்பூன் கடுகு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு 5-6 பாதியாக நறுக்கிய முந்திரி 2-3 காய்ந்த சிவப்பு மிளகாய் 1-2 கொத்து கறிவேப்பிலை 1/4 டீஸ்பூன் பெருங்காயம் 1/3 டீஸ்பூன் மஞ்சள் தூள் சுவைக்கேற்ப உப்பு
கடாய் ஒன்றில் அரிசி மாவை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பழுப்பு நிறமாக மாற கூடாது
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்
10 நிமிடங்கள் கழித்து அந்த மாவை மென்மையாக பிசைந்துகொள்ளவும்
பின்னர் அந்த மாவை இடியாப்ப உரலில் போட்டு இட்லி தட்டில் பிழிந்து 8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பின்னர் இடியாப்பத்தை ஆறவிடவும்
தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் உடைத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
பின்னர் அதில் பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவும்
தற்போது வேர்க்கடலை, துருவிய தேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பின்னர் அதனுடன் உதிரியான இடியாப்பத்தையும் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!