உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பார்லி தண்ணீர்...  எப்படி தயாரிப்பது.?

பார்லி தண்ணீர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இதுவொரு புத்துணர்ச்சி தரும் பானமாகும். இதில் நம் உடலுக்கு தேவையான பல நண்மைகள் உள்ளன

பார்லி தண்ணீர் இயற்கையாகவே நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இது நீரிழிவு நோயாளிகளின் சர்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது

பார்லி தண்ணீரில் அதிகளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், திடீரென உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் ஆபத்தை இது குறைக்கிறது

டைப் 2 டயாபடீஸ் நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட பார்லி நீர் குடிப்பதால், அவர்களின் ரத்த குளுக்கோஸ் அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன

பார்லியில் பயோ ஆக்டிவ் காம்பவுண்டுகள் இருப்பதால், இன்சுலின் உணர்திறனை இது அதிகப்படுத்துகிறது. டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது மிகவும் அவசியமாகும்

பார்லியில் உள்ள டையூரிடிக் பண்புகள் காரணமாக, நமது உடலில் உள்ள நச்சுகள், கழிவுகளை அகற்ற மிகவும் உதவியாக இருக்கிறது

பார்லி தண்ணீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது

பார்லியில் டோகோபெரோல் என்ற கலவை உள்ளது, இது உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது

கூடுதலாக, பார்லி தண்ணீர் குடிப்பது எடை இழப்புக்கு உதவுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

பார்லி தண்ணீர் தயாரிக்க, முதலில் பார்லியை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர், பார்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்

அது ஒரு ஆழமான பழுப்பு நிறமாக மாறியதும் அதை ஒரு கோப்பையில் வடிகட்டி அரை டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கவும்

காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு 15 நிமிடங்களுக்குப் பிறகு இதை உட்கொள்ளலாம்

குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து, நச்சுநீக்கும் பண்புகள் என பலவும் இருப்பதால் பார்லி நீர் தினமும் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் பானமாக இருக்கிறது

next

தினமும் மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரியமான 10 ஆரோக்கிய நன்மைகள்.!