முருக பக்தர்கள் விரதம் இருந்து எடுக்கும் வேல் காவடிகள்... எப்படி தயார் செய்யப்படுகிறது தெரியுமா.?
உலக பிரசித்தி பெற்று விளங்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மேற்கு கோபுர வாசலில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணியம் கோவில்
இந்த கோவிலில் 62-ம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழாவானது மார்ச் 25-ம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்து விமர்சியாக நடைபெற உள்ளது
பங்குனி உத்திரம் திருவிழாவில் ராமேஸ்வரம் தீவில் உள்ள சுமார் 1000-திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த அலகுகள் குத்திக்கொண்டு, பால்காவடி, பறவை காவடி, மயில் காவடி போன்ற காவடிகள் காலை 4 மணிமுதல் எடுக்க தொடங்கி இரவு முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்
இந்நிலையில், பங்குனி உத்திரத்திற்கு காவடிகளின் வேல்கள் அனைத்தும் ராமநாதபுரம் பகவதி அம்மன் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது
ராமேஸ்வரத்தில் வைத்தால் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்துவதால் உப்புக் காற்றினால் துருப்பிடித்துவிடும் என்பதால் அங்கு வைக்கப்படுகிறது
உத்திர திருவிழா தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்படுகிறது
அதில் இருக்கும் இரும்பு துருக்கள் மற்றும் தூசிகளை நீக்கி பாலிஷ் செய்து, தேர் காவடிகளுக்கு வர்ண பெயிண்ட்கள் அடித்து தயார் செய்யும் பணியினை தொடங்கி உள்ளனர்
வேல் காவடிக்கு குத்தப்படும் அலகுகள் 5 அடிமுதல் 20 அடி வரையிலும் உள்ளது. வேலின் அளவிற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது
அதிகப்பட்ச அடியாக இருக்கும் 20 அடி வேலுக்கு ரூ.5000 ஆயிரம் வரை செலவாகுமாம்
இந்த வேல்கள் துருப்பிடித்தாலோ சேதமடைந்தாலோ அலகு குத்தும் பொழுது வாயை கிழிந்துவிடும் என்பதால் அதனை பாலிஷ் செய்து துருக்களை நீக்கி பாலிஷ் செய்யும் பணியில் 15 பேர் கொண்ட குழுவாக இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்
இதனை பாலிஷ் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு ரூ.500 லிருந்து வாடகைக்கு விடப்படுகிறது