தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அப்போடு அழைத்து வருகின்றனர். அவரும் அந்த டைட்டிலை ஏற்றுக்கொண்டார்
ஆனால் அந்த டைட்டில் ஒரு பெரிய அவமானம் என பிரபல நடிகை ஒருவர் கூறி இருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
தமிழில் அசுரன், துணிவு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர்
அவர் அடுத்து வெற்றிமாறனின் விடுதலை - 2, ரஜினியின் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்
மஞ்சு வாரியரை லேடி சூப்பர் ஸ்டார் என மலையாள மீடியாக்களில் குறிப்பிடுவது வழக்கம்
இதை தான் விரும்பவில்லை என தற்போது பேசியிருக்கிறார்
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னை லேடி சூப்பர் ஸ்டார் என சிலர் குறிப்பிடுகிறார்கள். அது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்துகிறது
அது எனக்கு அவமானத்தை தான் கொண்டு வருகிறது
அந்த பட்டம் எனக்கு வேண்டாம், என் ரசிகர்களின் அன்பு மட்டுமே போதும் என மஞ்சு வாரியர் என கூறியுள்ளார்
ரியாஸ்கான் மகன் ஷாரிக்கிற்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா.?