ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திர நாளில் குறிப்பிட்ட மக்கள் சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர்
ரிக், யஜூர் வேதங்களை படிப்பவர்கள் ஆவணி அவிட்டம் தேதியில் பூணூலை மாற்றிக் கொள்கின்றனர். சாம வேதம் படிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள விஸ்வ ஸ்ரீசுந்தர விநாயகர் கோயிலில் பூணூல் மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இங்கு அதிகாலை முதலே வந்த பலர் பூணூல் மாற்றிக் கொண்டனர்
இந்நிகழ்வு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் அனந்த நாராயணன் கூறுகையில், "ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்
இந்த ஆவணி அவிட்ட நாளில் தான் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர், அசுரர்கள் திருடிவந்த வேதத்தை மீட்டு வந்து அவற்றை புனிதப்படுத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது
அதனால் தான் இந்த பூணூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு மற்றும் வேதங்கள் படிக்கும் முறையும் ஏற்பட்டது. எனவே இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது" என தெரிவித்தார்