கன்னியாகுமரியின் சம்மர் ஸ்பெஷல்... ஆரோக்கியப் பலன் கொண்ட அயனி சக்கை பழம்.!

சம்மர் வந்தாலே மாம்பழம், அண்ணாச்சி பழம், பலாப்பழம் எனக் கடைவீதியெங்கும் மணக்கத் துவங்கி விடும். ஆனால் கன்னியாகுமரி பக்கம் இந்த அயனி சக்கை தான் சக்கை போடு போடும்

இந்த அயனிசக்கை மரம் கேரளத்திலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தான் அதிகமாகக் காணப்படுகிறது

அயனி சக்கை என்பதும் ஒருவகை பலாப்பழம் தான். பொதுவாகவே குட்டியா இருக்கிற பழங்கள் எல்லாமே ஸ்பெஷல் டேஸ்ட்டுடன் இருக்கும். அது போல தான் இந்த அயனி சக்கையும்

உருவத்தில் சிறிய பலாப்பழத்தை போன்று இருக்கும். ஆனால் சாப்பிட்டா சாப்பிட்டுட்டே இருக்கணும் போல செம தித்திப்பா இருக்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்பெஷலாக சொல்லப்படுற இந்த அயனி சக்கை பழம் கேரளாவில் ஆஞ்சிலி பலா என்று சொல்லப்படுகிறது

இந்த அயனி சக்கை காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்ததும் அதன் மேல் இருக்கும் முள்முள்ளான தோல் மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்

வழக்கமான பலாப் பழங்களில் தோலை வெட்டி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் அயனி சக்கையில் அப்படி இல்லை

பழுத்ததுமே அந்தத் தோலும் மென்மையாக மாறி விடும், எனவே நம்முடைய கைகளால் அந்த தோலைச் சாதாரணமாகப் பிரித்து எடுக்க முடியும்

பிரித்து எடுத்துப் பார்த்தால் உள்ளே ஆரஞ்சு நிறத்தில் சக்க சுளைகள் கொத்தாகப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். பார்ப்பதற்கு மட்டுமா சாப்பிட்டு பார்த்தால் ருசி அப்படி இருக்கும்

லேசான புளிப்பும், இனிப்பு சுவையும் சேர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் காண முடியாத அயனி சக்கை, கன்னியாகுமரியில் மட்டும் வளர்கிறது

இதில் சுவை மட்டும் இல்லை வைட்டமின் சத்தும் அதிகம் இருப்பதால் அனைவரும் இந்த அயனி சக்கை பழத்தை விரும்பி சாப்பிடுவர். மேலும் இந்த பழம் உடல் சூட்டையும் தணிக்க சிறந்தது

தற்போது குமரி மாவட்டத்தில் அயனி சக்கை சீசன் தொடங்கி உள்ளது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

next

அளவுக்கு அதிகமாக மக்கானாவை சாப்பிடுவதால் ஏற்படும் 7 பக்க விளைவுகள்.!