தஞ்சையில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்.! இங்க இவ்வளவு விஷயம் இருக்கா.?

தஞ்சாவூர் புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள நிர்மலா நகரில் இந்திய உணவுக் கழகத்தின் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அதில் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவு தேவைக்காக வேட்டையாடியது தொடங்கி இந்தியா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல நாடுகளில் விவசாயிகள் உணவு தயாரிப்பதற்கான பொருள்களை விளைவிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இங்கு உள்ளன

நெல் நாற்று நடுவது தொடங்கி அரிசியாக பொதுமக்களுக்கு கிடைப்பது வரையிலான காட்சிகளை மெழுகு & மரப் பொருள்களை கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்படிருப்பது பலரையும் கவர்ந்து வருகிறது.

அதில் உழவு கலப்பைகள், தானியங்களைப் பாதுக்காக்க அமைக்கப்பட்ட களஞ்சியங்கள், உணவைத் தாக்கும் பூச்சி வகைகள் உள்ளிட்ட பலவற்றை மெழுகு & மரப்பொருள்களின் மூலம் டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டுளது

13 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தனக்கான உணவை எப்படி சேகரித்தான், காலப்போக்கில் வேளாண்மை எப்போது உருவானது என்கிற 8 நிமிடம் காணொலியை ப்ரொஜெக்டர் மூலமாக காண்பிக்கப்படுகிறது

உலக நாடுகளில் மனிதர்கள் உணவை சேமிக்கும் முறை மற்றும் உணவை தாக்கும் பூச்சிகள் ஆகியவற்றை தொடு திரை மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பாரம்பரிய உணவுகளை அடையாளப்படுத்தும் விதமாக அந்த மாநிலத்தை தொடு திரை மூலமாக தொடும் போது அம்மாநிலத்தின் இரண்டு உணவுகளும் அந்த உணவை சமைக்கும் முறைகளையும் திரையில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது

நெற்பயிர்கள் நடவு செய்யும் முறைகள் முதல் நெல் கிடங்கில் சென்று இறுதியில் நியாய விலை கடைகள் மூலம் மக்களிடம் சேறும் வரை உள்ள நேரடி காட்சிகளை 3D தொழில்நுட்பத்திறன்‌ மூலம் பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3D-யில் பார்ப்பதால் களத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை உணரமுடிகிறது. மேலும் மாணவர்களுக்காக வேளாண்மை பற்றிய கேள்விகளை வினாடி வினா மூலம் திரையில் பார்த்து பொத்தான்கள் மூலம் பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வேளாண்மை பற்றிய தகவல்களை டிஜிட்டல் முறையில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியத்தை வார நாட்களில் திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி முதல் மாலை 5 வரை பார்கலாம். இதற்கு எந்த விதமான கண்டனமும் கிடையாது.

மேகமலை முருகன் கோயிலில் இத்தனை சிறப்புகளா.?