மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்.!

கோவில் நகரம் என்று மதுரையை சொல்வதற்கு காரணம் என்னவென்றால் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பழமையான கோவில்கள் அதிகமாக இருப்பது தான்

அதிலும் மதுரைக்கு அடையாளமாக இருக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பலவிதமான சுவாரசியமான சுவாமி சன்னதிகள் இருக்கின்றன

அப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெளிப்புறத்தில் இருக்கக்கூடிய சுவாரசியமான கோவில்களில் ஒன்றுதான் பாதாள குபேரபைரவர் கோவில்

வடக்கு சித்திரை வீதி மற்றும் மேல சித்திரை வீதி சந்திப்பில் இருக்கக்கூடிய இந்த கோவிலுக்கு பாதாள குபேர பைரவர் என்று பெயருக்கு காரணம் என்னவென்றால் இங்கு இருக்கக்கூடிய பைரவர் பாதாளத்தில் இருப்பது போல் காட்சி அளிப்பார்

அதாவது வெளியே இருந்து பார்க்கும் பொழுது உள்ளே பைரவர் இருப்பது தெரியாது அந்த அளவிற்கு பாதாளத்தில் இருப்பார். குறிப்பாக இந்த கோவிலின் சன்னதி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்

அதாவது ஒரு நாளைக்கு வரக்கூடிய ராகு காலத்தில் மட்டுமே கோவிலின் சன்னதி திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும் என்பது சிறப்புகளாக இருக்கின்றது

அதாவது அக்காலகட்டத்தில் இருந்து ராகு காலத்தில் மட்டும் இக்கோவில் திறக்கப்பட்டு வந்ததால் தற்பொழுது வரை அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது

இப்படி ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும் இந்த பாதாள குபேர பைரவரை வழிபடுவதன் மூலமாக செல்வ செழிப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும்

குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தீர வழி வகுக்கக் கூடியவையாகவும், திருமண தடை, குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகின்றது

next

உடலுக்குக் குளிர்ச்சி தரும் கோரைப்பாய்… கலர் கலராய் தயாரிக்கும் காடையாம்பட்டி.!