மதுரையில் போட்டோஷூட் எடுக்க தரமான ஸ்பாட்...  எங்கே இருக்கு தெரியுமா.?

மதுரையில் சமணர்கள் வாழ்ந்ததற்கான பல சமணர் மலைகள் உள்ளன. அதில் ஒரு சமணர் மலை தான் மதுரையிலிருந்து 25 km தொலைவில் உள்ள கீழக்குயில்குடி சமணர் மலை

கீழக்குயில் குடி என்ற ஊரில் இந்த மலை இருக்கிறதுனால இந்த மலைக்கு கீழக்குயில்குடி சமணர் மலை என்று பெயர் வந்தது

இந்த மலையை ஒட்டியே ஒரு அழகான அய்யனார் கோவிலும், கோவிலுக்கு வெளிப்புறத்தில் மீன்கள் துள்ளி குதிக்க கூடிய குட்டி தாமரைக் குளமும் உள்ளது

இப்படி மரம் செடி கோவில் குளம் மழையின்னு இயற்கை சூழ்ந்து இருக்கக்கூடிய இந்த இடம் ரீசன்டா டூரிஸ்ட் ஸ்பாட்டா மாறிட்டு வருது

அய்யனார் கோவில் திருவிழா நாட்களில் மட்டும் கூட்டம் இருந்து வந்த நிலையில இப்ப இந்த பகுதிக்கு குடும்பத்தோடு சேர்ந்து சமணர் மலையை பார்த்துட்டு போக சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருக்காங்க

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

ஆனா இந்த சமணர் மலையை போய் பாக்கணும்னா குடும்பத்தோடும், இளைஞர்கள் சேர்ந்து போறதுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. தனியா மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை

அதே மாதிரி கோவில், குளம், மலைன்னு இந்த பிளேஸ் நமக்கு வின்டேஜ் பீல் கொடுக்கறதுனால ப்ரீவைண்டிங் போட்டோ ஷூட்டும் இந்த பகுதியில நடந்துட்டு வருது

கோடை விடுமுறை நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் நீங்களும் மதுரையில குடும்பத்துடன் சேர்ந்து ஏதாச்சு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா கண்டிப்பா இந்த பிளேஸ்க்கு நீங்க போயிட்டு வரலாம்