சிலருக்கு காலையில் எழுந்ததும் காஃபி அல்லது டீ குடித்தால் தான் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு சிலருக்கு இரவு தூங்கும் முன் பால் குடித்தால் தான் நாளை நிறைவு செய்த உணர்வு வரும். சிறு வயது முதலே இரவு தூங்குவதற்கு முன் பல குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுத்து பெற்றோர்கள் பழக்கப்படுத்தி விடுகின்றனர்.📷
தினசரி இரவு நேரத்தில் கோல்ட் மில்க் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஏற்கனவே சாப்பிட்ட இரவு உணவே சரியாக செரிமானம் ஆகியிருக்காத நிலையில், தூங்குவதற்கு முன் பால் குடிப்பது செரிமான மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
இரவில் பால் குடிப்பதன் காரணமாக புரோட்டின் மற்றும் பால் கொழுப்புகளை வளர்சிதைமாற்றம் செய்து ஜீரணிக்க நேரம் எடுக்கும். இதனால் ஆட்டோமேட்டிக்காக எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
இரவு நேரத்தில் நமது உடல் ஓய்வில் இருக்கும் போது பாலில் உள்ள புரோட்டினை வளர்சிதைமாற்றம் செய்வது உடலுக்கு கடினமாக இருக்கும். இதனால் அசௌகரியம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
இரவில் பால் குடிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்குவதோடு கல்லீரல் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இது உட்லைன் வளர்சிதை மாற்ற விகிதத்தை மெதுவாக்குவதோடு கொழுப்பு படிவு (fat deposition) மற்றும் எடை அதிகரிக்க காரணமாகிறது.