குற்றாலம் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்க போகிறதா... இன்றைய நிலை என்ன.?

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. காலை வரை 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரியில் 81 மி.மீ. மழை பதிவானது

ராமநதி அணையில் 60 மி.மீ, கருப்பாநதி அணையில் 18.50 மி.மீ, கடனாநதி அணையில் 16 மி.மீ, சங்கரன்கோவிலில் 1 மி.மீ. மழை பதிவானது

தொடர் மழையால் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது

ஐந்தருவியில் குறைவான அளவில் தண்ணீர் விழுந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது

தென்காசியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவாக விழுந்த போதிலும் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

ஏசி இல்லாமலேயே வீடு குளிர்ச்சியாகும்... டேபிள் ஃபேனை இப்படி யூஸ் பண்ணிப்பாருங்க!

உலகின் சிறந்த உணவுகளின் பட்டியல்... ஆதிக்கம் செலுத்தும் இந்திய உணவுகள்...

இந்த நாட்டில் பாம்புகளே இல்லையாம்! காரணம் என்ன?

More Stories.

மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவியின் முன்பு செல்பி எடுத்து செல்கின்றனர்

மேலும் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 17 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றால அருவிகளை வனத்துறையின் கட்டுப்பாட்டில் விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், தென்காசி மத்தளம்பாறை குற்றாலம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது

இதனால் அருவிகள் அணைகள் உள்ள பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது

next

ராகு, கேது தோஷம் நீக்கும் அருணாச்சல ஈஸ்வரர் கோவில்… எங்கு உள்ளது தெரியுமா.?