மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள தரங்கம்பாடியில் சீகன்பால்க் பயன்படுத்திய பொருட்கள் உள்ள மியூசியம் உள்ளது
சீகன் பால்க் 1682 ஜெர்மனியில் பிறந்து ஜெர்மனியில் லூத்தரன் பாதிரியாராக பணியாற்றி வந்தார்
இவர் கிறிஸ்தவ மதபோதகராக 1706-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி தரங்கம்பாடி கடற்கரைக்குக் கப்பல் மூலம் வந்தடைந்தார்
1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது
இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்
இவர் வாழ்ந்து மறைந்த வீடு தற்போது மியூசியமாக செயல்பட்டு வருகிறது
சீகன்பால்க் எழுத்து பணிக்காக பயன்படுத்திய மேஜை, அவர் எழுதிய புத்தகங்கள், சீகன்பால்க் பயன்படுத்திய பேனா, அவர் குறித்த வரலாறு, Johann Heinrich cordes, christoph theodosius Walther,
christian fredrich schwartz, hildegard Klein போன்றவர்களின் வரலாறு புகைப்படங்கள், சீகன்பால்க் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவைகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த மியூசியத்திற்கு வருபவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.20 செலுத்த வேண்டும். உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் தரங்கம்பாடி கடற்கரைக்கு வந்து இந்த சீகன்பால்க் வீடு மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்
புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய 8 சிறந்த உணவுகள்.!