ஜல்லிகட்டுக்கே பேர் போன காங்கேயம் காளை காரி கருவாயன்.!

காங்கேயம் காளைகள் இந்தியவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாடு இனம் ஆகும்

இந்த வகை இனங்கள், இந்தியாவின் பிரசித்தி பெற்ற உள்நாட்டு இனம் ஆகும். இந்த காளைகள் தென் இந்தியாவின் அடையாள சின்னமாக, போற்றப்படுவது தான் கூடுதல் சிறப்பு. காங்கேயம் மாட்டில் உள்ள வகைகள் மயிலை (வெள்ளி), பிள்ளை (வெண்மை), செவலை (சிவப்பு), காரி (கறுப்பு) ஆகும்

முந்தைய காலங்களில் ஈரோடு மாவட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவை இந்த காங்கேயம் மாட்டினங்கள். தற்போது மாவட்டம் பிரிக்கப்பட்டு காங்கேயம் திருப்பூர் மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டிருந்தாலும் குறும்பு நாட்டின் (ஈரோட்டுன்) குறும்புக்கார செல்லங்கள் இவை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் காராளன் பாம்  மற்றும் கொங்கன் பாம் என்ற பெயரில் பாரம்பரிய காங்கேயம் மாடுகள் வளர்க்கப்படுகின்றன

இதில் வளர்க்கப்படும் பூச்சிகாளை என்று சொல்லப்படும் காரி கருப்பன் ரோசக்காரன் ஆனால் பாசக்காரன். யாரும் கிட்ட நெருங்கவே அச்சுருத்தும் திமில் அது அவனது அழகான திமிர். சும்மா சாலிக்காக சேட்டை பன்னும் இந்த கருப்பன் காரி ஆனா குழந்தைகளின் கையில் குழந்தையாய் மாறிப்போவான்

எட்டுவயதானாலும் எட்டி வைக்கும் நடையின் கம்பீரத்தை பார்த்து யாராக இருந்தாலும் வாயைப்பிளந்து நின்று தான் ஆவார்கள். ஆக மொத்தத்தில் கருப்பன் அழகன்

இவன் சல்லிகட்டு களம் காணவில்லை என்றாலும் அதற்கான அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறான். புலிக்கு பிறந்தது புலிதான் என்பது போல காரி கருப்பன் மகன் தோற்றத்திலும் பாசத்திலும் அப்படியே இவன் பெயர் கருவாயன் என்று செல்லமாக அழைக்கப்படும் கரப்பராயன் இவனுக்கு குழந்தைகள் என்றாலே அம்புட்டு பிரியமாம்

நாட்டு மாடுகள் குழந்தை போன்ற குணம் உடையவை. நம் வீட்டில் உள்ள ஒருவராகத்தான் எண்ணத் தோன்றும். அதனால்தான், ‘அழகி’, ‘மீனாட்சி’, ‘லட்சுமி’, ‘ராணி’, ‘லிங்கம்’ என ஒவ்வொரு மாட்டுக்கும் பெயர் வைத்து அழைக்கிறார்கள். பெயரைக் கேட்டுக் கேட்டு நாளடைவில் அவற்றுக்கும் பழகிவிடும்

அற்புதமான நாட்டு மாடுகளை எல்லாம் அழித்துவிட்டு, நம்ம மண்ணுக்கு தொடர்பில்லாத கலப்பினம், மரபணு மாற்றப்பட்ட மாடுகளை பரப்பிட்டாங்க, இவற்றால் மண்ணுக்கோ, மனுசனுக்கோ எந்த பலனும் இல்ல. நாட்டு மாடு பால் குறைவாக கறக்கலாம்

ஆனால், ஒவ்வொரு சொட்டும் தாய்ப்பாலுக்குச் சமம். பால் மட்டுமல்ல சாணம், கோமி யம் உட்பட எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. நம்ம விவசாயிங்க, விவசாயம் கைவிட்டுப் போன உடனே மாட்டை வித்துடுறாங்க

Stories

More

உலகிலேயே மிக உயரமான சனீஸ்வரபகவான் கோவில்.!

திருவள்ளுவரைப் போற்றும் பிரான்ஸ் அரசு..!

மதுரையில இப்படி ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டா..?

ஆனா மாடு வளர்ப்பில் பால் மட்டுமே ஆதாரம் அல்ல. வெண்ணெய், நெய் என மதிப்பு கூட்டி சந்தைக்கு கொண்டு வரலாம். மாட்டின் கழிவுகளை வைத்து கோமிய அரக்கு, ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள், விபூதி, இயற்கை மருந்து, பஞ்சகவ்யம் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம்

தமிழகத்தில் பர்கூர், காங்கேயம், செம்மரை, அலிகார், உம்பளசேரி உள்ளிட்ட பல நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்திய அளவில் கிர், தார்பார்க்கர், சாகிவால், காங்கிரிஜ், ராட்டி போன்ற நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன” என்பது நிதர்சனமான உண்மை

ஒரு இனத்தின் வரலாறு என்பதை சமகால மனிதனின் கால்நடை வளர்ப்பில் இருந்தும் அறிய முடியும். அந்த வகையில், நமது பாரம்பரியத்தைக் காக்க, பாரம்பரிய மாட்டினங்களைக் காப்பதும் முக்கியம்

அரண்மனை தோற்றத்தில் காட்சியளிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்.!