ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி
அட்லி தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார்
ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்
இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் கடந்த செப்.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது
'ஜவான்' திரைப்படம் முதல் நாளே ஹிந்தி திரை உலகில், மிகப்பெரிய ஓபனிங் கிடைத்த திரைப்படமாக மாறியது.மேலும் முதல் நாளே 129.6 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது
இந்நிலையில், ஜவான் படம் வெளிவந்து 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் படம் ரூ.520 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.