முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச் சங்கமம் விழா விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடகம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை
கலைச்சங்கம் கலை விழாவாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்பரம் நகராட்சி திடலில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் குழுக்களுடன் கோலாகலமாக நடைபெற்றது
கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், அம்மன் வேடமடைந்து ஆடுதல், நாடகங்கள் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
கலைஞர்கள் அனைவரும் தத்துரூபமாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தனர்
இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆர்வமாக கண்டு களித்தனர்