வழிவிடு முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா... காப்புகட்டுதலுடன் தொடக்கம்.!

ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்று அமைந்திருக்கும் வழிவிடு முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு காப்பு கட்டப்பட்டு சஷ்டி திருவிழாவானது விமர்சியாக நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில், இன்று கந்தசஷ்டி காப்பு முன்னிட்டு கட்டுதலானது காலை கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் புனித நீர் தெளித்து மூலவருக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், மஞ்சள், இளநீர் போன்ற 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது

இதனைத் தொடர்ந்து, வழிவிடு முருகனின் வேலுக்கு காப்பு கட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து 56-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு காப்பு கட்டப்பட்டது

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் வழிவிடு முருகனை வழிபட்டனர்

Stories

More

கிறிஸ்துமஸ், சபரிமலை சீசனை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

மழைக்காலங்களில் பைக்கை பராமரிப்பது எப்படி தெரியுமா..

கன்னியாகுமரியில் மறைந்திருக்கும் கண்கவர் அரண்மனை பற்றி தெரியுமா?

இன்றிலிருந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, அலங்காரம் செய்து ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெறும்

எண்ணெயில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்.?