ஊட்டியில் ஓர் கர்நாடகா கார்டன்... சுற்றுலாப் பயணிகளை கவரும் அம்சங்கள்.!

மேற்குதொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள நீலகிரி மலையில் 7,600 அடி உயரத்தில் அமைந்துள்ள “மலைகளின் அரசி” என்றழைக்கப்படும் ஊட்டியில் நிலவும் குளுமையை அனுபவிக்கப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோடைக்காலத்தில் மக்கள் நீலகிரிக்கு வருவர்

அவ்வாறு சுற்றுலா வரும் பயணிகள் சுற்றிப் பார்த்து மகிழ தாவரவியல் பூங்கா, ரோஸ்கார்டன் உள்பட அம்சங்கள் நீலகிரியில் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது

அந்த வகையில் ஊட்டியில் அமைந்துள்ள கர்நாடகா பூங்கா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது

தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஊட்டியில் உள்ள அடர்த்தியான வனங்கள், ஓடைகள், இதமான சீதோசன நிலை, கண்கவரும் இயற்கை அமைப்பைக் கண்டு மெய்சிலிர்த்துப் போன மைசூர் சாம்ராஜ்யத்தின் மகாராஜா,

ஸ்ரீ ஜெய சாமராஜேந்திர உடையார் ஊட்டியில் தங்க ஒரு கோடை அரண்மனையைக் கட்டினார். அதுதான் ஃபர்னில் அரண்மனை

பின்னர் ஊட்டியில் 62 ஏக்கர் நிலத்தை மகாராஜா 1964ஆம் ஆண்டு கர்நாடகா அரசுக்குப் பரிசாகக் கொடுத்தார். கர்நாடகா அரசோ 30 ஏக்கர் நிலத்தை 1964ஆம் ஆண்டும், 2008ஆம் ஆண்டு 8 ஏக்கர் நிலத்தையும் கர்நாடகத் தோட்டக்கலைத்துறையிடம் ஒப்படைத்தது

அதன் பின்னர் இந்த நிலத்தில் மிதவெப்பக் காய்கறி மற்றும் கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அந்த உற்பத்தி நிறுத்தப்பட்ட பின்பு தான் பூங்கா உருவாக்கப்பட்டது

குளிர்காலத்தில் மூக்கடைப்பினால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா?

பளபளப்பான முகத்திற்கு தேநீரை எப்படி பயன்படுத்துவது?

கல்லீரலை சுத்தப்படுத்தி கழிவுகளை நீக்கும் உணவுகள்...

More Stories.

கடந்த 4 வருடமாக கர்நாடகத் தோட்டக்கலைத்துறை அந்த நிலத்தில் அழகிய பூங்காவை உருவாக்கி வந்தது. தற்போது அதன் முதல் பகுதியைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்

இந்த பூங்காவின் முக்கிய அம்சங்களாக டாப் ஏரி கார்டன், இத்தாலியன் கார்டன், மெஸ்கார்டன், ரோஸ் கார்டன், சங்கன் கார்டன், குளங்கள், தேயிலை கார்டன், அழகிய புல் தரைகள் மற்றும் மலர் மேடைகள், தொங்குபாலம் அமைக்கப்பட்டுள்ளன

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் புல்வெளிகளையும், மலர் அருவிகளையும், கூரைதோட்டம், பானை தோட்டம், பிரம்மை பூக்கள் நீரூற்று ஆகியவற்றைக் கண்டு ரசிக்கின்றனர்

next

மண்பானையில் சமைத்தால் இவ்வளவு நன்மைகளா.?