கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முதல் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வரையிலான எண்ணற்ற புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன
அதில் சில கோவில்கள் பரபரப்பான நகரமைப்பில் இல்லாமல் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளன அதில் ஒன்று தான் காட்டழகர் கோவில்
ஆன்மீக நகரமான ஶ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட செண்பக தோப்பு வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது
இங்கு செல்ல வேண்டும் என்றால் வனவிலங்குகள் வசிக்கும் அடர்ந்த வனப்பகுதியில் 6 கி.மீ நடந்து செல்ல வேண்டும்
செண்பக தோப்பு அடிவாரத்தில் இருந்து நடக்க தொடங்கினால் இரண்டு கி.மீ தொலைவில் மீன்வெட்டி அருவி எனும் அருவியை அடையலாம்
அதில் நீராடிவிட்டு மீண்டும் நடக்க தொடங்கினால் சரியாக ஒரு மணி நேரத்தில் காட்டழகர் கோவிலை அடையலாம்
சரியாக வனப்பகுதியில் பெருமாள் சயன கோலத்தில் இருப்பதை போன்ற பிம்பம் கொண்ட மலை முகட்டின் முற்பகுதியில் கோவில் அமைந்திருக்கும்
அங்கு செல்ல 247 படிகளை ஏறி செல்ல வேண்டும். இந்த 247 படிகள் தமிழில் உள்ள 247 எழுத்துக்களை குறிக்கும்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுடன் சேர்ந்த இந்த கோவிலின் மூலவராக சுந்தர ராஜ பெருமாள் காட்சி தருகிறார். வனப்பகுதியில் அமைந்துள்ள அழகர் என்பதால் காட்டழகர் என பெயர் பெற்றுள்ளார்
புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் இங்கு விஷேடமாக இருக்கும். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
பாதுகாப்பட்ட வனப்பகுதி என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்