தனிநபர் கடன், வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதேனும் கடனாக இருந்தாலும், நீங்கள் சில உத்திகளை அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது நிதி நிறுவனங்கள் சில மதிப்பீடுகளை செய்கின்றனர்.
கடன் பெறுவதில் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர் கடனுக்கான விரைவான ஒப்புதலுக்கு, ஒருவர் 720 முதல் 750-க்கு இடையில் சிபில் ஸ்கோர் வைத்திருப்பது நல்லது.
பெரிய அளவிலான கடன் பெறுவதற்கு நிலையான வேலை மற்றும் நிலையான வருவாய் இருப்பது அவசியம்.
‘வரவுக்கு ஏற்ற செலவு’ என்பது போல, வருவாயை விட கடன் தொகை அதிகமாக இருக்கக் கூடாது.
பல கடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம். ஒரு முறை நிராகரிக்கப்பட்டால் குறைந்தது மூன்று மாதங்கள் பின்னர் முயற்சிக்கவும்.