கொடைக்கானல் டூர் போறீங்களா..  இந்த புது அப்டேட்டை தெரிஞ்சுக்கோங்க.!

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல்

தினம்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவரும் தமிழக மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வருகின்றனர்

சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்லும் சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதியாக குணா குகை,பெரிஜம் ஏரி, தூண்பாறை, மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி செல்லும் திட்டம் வரும் 2024 ஜனவர 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

வாகனம் நுழைவு கட்டணங்களாக பேருந்திற்கு ரூ 100, கார் மற்றும் வேன் ரூ 50, இருசக்கர வாகனங்களுக்கு ரூ 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இதில் கொடைக்கானலை சேர்ந்த டாக்ஸி (Taxi (van)) அசோசியேசன் உள்ளவர்களுக்கு வனத்துறை சார்பாக ஸ்டிக்கர் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது

Stories

More

குழந்தைகளுக்கு காலையில் காபி, டீ  கொடுப்பதை விட இதை கொடுங்கள்....!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

தேன் வளர்ப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா.?

இந்த ஸ்டிக்கரை ஒட்டிய வாகனங்களுக்கு அனுமதி இலவசம் என்பதையும் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு பணம் செலுத்தி தான் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளது

அதேபோல் கொடைக்கானலில் உள்ள மக்களும் வாகனங்களில் சென்றால் கட்டணம் செலுத்தி தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா.?