குடும்பமாக கொண்டாட கோத்தகிரி பார்க் தான் பெஸ்ட் சாய்ஸ்.!

நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இயற்கை அழகு பொங்கும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளது

மேலும் அழகுற வடிவமைக்கப்பட்ட பல்வேறு பூங்காக்களும் உள்ளன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா வருகின்றனர்

நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி சாலையையே ஊட்டிக்கு வர பயன்படுத்துகின்றனர்

நீலகிரி மாவட்ட மக்களின் முக்கியமான ஆன்மீக ஸ்தலங்கள் அதிக அளவில் கோத்தகிரி பகுதிகளிலேயே உள்ளது. மேலும் தேயிலையும் அதிக அளவில் இந்த பகுதிகளில் தயார் செய்யப்படுகிறது

ஆனால் கோத்தகிரி நகரப் பகுதியில் மக்கள் பொழுதுபோக்கும் இடமாக ஒரே ஒரு பூங்கா மட்டுமே உள்ளது. அது தான் நேரு பூங்கா

ஜான் ஸ்கொயர் பகுதியில் அமைந்துள்ள நேரு பூங்கா குறித்து நீலகிரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரிவதில்லை

கோத்தகிரி சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே இந்த பூங்காவினை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்

வனவிலங்குகள் மற்றும் பறவைகள் பொம்மைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் அமைதியான குழ்நிலை நிலவுகிறது

இனி வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு டாட்டா.. ரயில்வேயில் அதிரடி மாற்றங்கள்!

வாழ்நாளில் ஒருமுறை கூட தூங்காத உயிரினம் எது தெரியுமா..

நாய்கள் அதிகம் எதை விரும்புகிறது தெரியுமா?

More Stories.

மேலும் இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாடும் வண்ணம் பல விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது

இந்த பூங்காவில் வருடத்திற்கு ஒரு முறை தோட்டக்கலைத் துறையின் சார்பில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது

அந்த கண்காட்சி நடைபெறும் காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். இதர நாட்களில் இந்த பூங்கா வெறிச்சோடிக் காணப்படுகிறது

next

கன்னியாகுமரியில் ஒரு நாளில் சுற்றிப்பார்க்க டாப் 5 சூப்பர் இடங்கள்.!