சித்ரா பௌர்ணமியில் மட்டுமே நடைபெறும் திருவிழா பற்றி தெரியுமா.?

சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு தென்காசியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் கிரிவலம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

தென்காசியில் செண்பகாதேவி அம்மன் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது

குற்றால மெயின் அருவியின் மலை மேலே சென்று ஏறக்கூடிய இந்த கோயிலுக்கு சித்திரை பௌர்ணமி திருவிழாவிற்கு மட்டுமே பொதுமக்கள், பக்தர்கள் தங்கி இருந்து வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படும்

அந்த வகையில் நேற்று சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு திருக்குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் மலை மேல் ஏறிச் சென்று செண்பகாதேவி அம்மன் கோயில் முன்பு பொங்கல் இட்டுசிறப்பு வழிபாடு நடத்தின

மேலும் இதில் மிக முக்கியமான நிகழ்ச்சியான ஔவையார் அம்மனுக்கு கொழுக்கட்டை செய்து படையல் இட்டு சாமியை வழிபடும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது

காதுகள் சொல்லும் உங்கள் குணாதிசியம் என்ன.?

கம்ப்யூட்டர் கீ-போர்ட்டில் இதை கவனிச்சிருக்கீங்களா.?

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு விமானமா? எங்கே தெரியுமா?

More Stories.

முன்னதாக வனத்துறையினர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்களை தீவிர பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அவர்களை அனுமதித்தனர்

பிளாஸ்டிக் உள்ளிட்டவை கொண்டு செல்ல அவர்கள் தடைவிதித்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்