காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவி மற்றும் காரையார் கோயிலுக்கு வருவோர் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல வேண்டும் என வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது
இதுகுறித்து பாபநாசம் வனச்சரகர் சக்திவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில், “பொங்கல் திருநாளை தொடர்ந்து காணும் பொங்கல் அன்று நீர்நிலை
மற்றும் மலைப் பகுதிகளுக்கு மக்கள் குடும்பத்தோடு சென்று காணும் பொங்கலை கொண்டாடுவது வழக்கம்
இவ்வாறு காணும் பொங்கலையொட்டி நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் காரையார் வருகை தரும் மக்கள் அனுமதி அளிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல வேண்டும்
எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது மது பாட்டில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பாலிதீன் பைகள் எதுவுமே கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை
வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. மாலை ஆறு மணிக்குள் வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும்” என தெரிவித்துள்ளார்