தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி மஹால், சரபோஜி மியூசியம், கலைக்கூடம், சங்கீத மஹால் என வரலாற்று நிறைந்த பொக்கிஷங்கள் உள்ளது
பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூர் அரண்மனைக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக அரண்மனை முகப்பு மதில் சுவரில் குதிரைப்படை யானைப்படை உள்ளிட்ட வரலாற்று மன்னர்களின் வாழ்வியலைப் பற்றிய பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன
அந்த ஓவியங்கள் எல்லாம் பராமரிப்பின்றி இருந்ததால் கால போக்கில் அழிந்து விட்டன
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அரண்மனை வளாகத்தில் நுழைவு வாயிலில் உள்ள இரண்டு அரசர் பள்ளியின் சுற்றுச்சுவரில் பழங்கால மன்னர்களின் வாழ்க்கை முறையை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்வதற்காக ஓவியங்களை வரைய திட்டமிட்டார்
பொதுப்பணித்துறை பாரம்பரிய கோட்டம் மற்றும் தொல்லியல் துறை சார்பில் 17,18-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர பேரரசு கால இராமாயண இதிகாசங்களை ஓவியங்களாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கும்பகோணத்தை சேர்ந்த ஓவியர் ரமேஷ் குழுவினரால் தத்ரூபமான ஓவியங்கள் வரையப்பட்டு வந்தன
தற்போது ஓவியங்கள் வரையும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்ததுள்ள நிலையில் அரண்மனை நுழைவு வாயிலின் சுற்று சுவரில் பழங்களால மன்னர்களின் வாழ்க்கை முறையை கண்முன்னே பார்ப்பது போல ஓவியங்களால் ஜொலிக்கிறது
மேலும் இது குறித்து ஓவியம் ரமேஷ் நமக்கு அளித்த பேட்டியில் கூறியது" பல்லவர், பாண்டியர்,சோழர் காலத்திலிருந்து மாறுபட்டது விஜயநகர பேரரசு கால ஓவியங்கள்
அதனை தற்போது அரண்மனை வளாகத்தில் வரைந்துள்ளோம். இந்த ஓவியங்களை வரைய 42 நாட்கள் ஆகின. மொத்தம் 54 ஃப்ரேம்கள் உள்ளது
விஜயநகர கால ஓவியங்களை பொறுத்தவரையில் அவர்களின் மூக்கு நீளமாகவும் கண்கள் முட்டை வடிவிலும் இருக்கும்
இந்த ஓவியத்தின் சிறப்பு அவர்களின் ஆடை அணி கலன்கள், நடை பாவனை முற்றிலும் மாறுபட்டதாகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும்