இயற்கை எழில் கொஞ்சும் சமணர்கள் வாழ்ந்த குகை பகுதி.!

2500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையான சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்ந்த இந்த பகுதி எங்க இருக்கு அப்படின்னு பார்த்தீங்கன்னா மதுரை நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் ரோடு

அதாவது காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு முன் முத்துப்பட்டி என்கிற கிராமத்திற்கு பின்பகுதியில் தான் சமணர்கள் அழகான குகையில வாழ்ந்த இந்த பகுதி உள்ளது

போகிற வழியில் தொல்லியல் துறைக்கு உட்பட்ட பெருமாள் மலை போர்டு இருக்கும் அந்த போர்டுக்கு ஆப்போசிட்லையே ஒரு பெரிய மலைப்பகுதி உள்ளது

அந்த மலைப்பகுதி கிட்டே போய் பார்த்தால் மலை ஏறுவதற்கான பாதையும் இருக்கும் 

இயற்கையான அதாவது மரம் மலைகள் நிறைந்த பசுமையான இடத்தில் பத்திற்கும் மேற்பட்ட சமண படுக்கைகள் உள்ளது

அதே மாதிரி இந்த சமணர் படுக்கை பகுதியில் மழை பேஞ்சாலும் தண்ணி உள்ள வராத மாதிரி மலையின் மேல் பகுதியில் விளிம்பு மாதிரி கற்களை வெட்டி வச்சிருக்காங்க

கொஞ்சம் தூரம் நடந்து போனதும் இரண்டு மழைப்பகுதிகள் சாய்ந்த மாதிரியும் நடுவில் அழகான ஒரு குட்டி குகையும் உள்ளது

Stories

More

மீண்டும் வந்தது கொரோனா..! அச்சத்தில் நாமக்கல் மக்கள்...!

புளியங்குடி முந்தல் அருவிக்கு போயிருக்கீங்களா?

அருண் ஐஸ்கிரீம்க்கும் விருதுநகருக்கும் உள்ள தொடர்பு என்ன

ஒரு பக்கம் இந்த அழகான மலைப்பகுதியும் இங்கிருந்து பார்க்கும்போது பச்சை பசேலும் புல்வெளிகளும் மரங்களும் ஆடுகளும் நீளமான காட்டு மலைப்பகுதியும் இருப்பதால் இந்த இடம் ரொம்பவே அமைதியாவும் அழகாகவும் இருக்கும்

நீங்களும் இயற்கையான சூழ்நிலையை ரசிச்சுக்கிட்டு மினி டிரெக்கிங் மாதிரி போகணும் என்று நினைத்தால் கண்டிப்பா இந்த இடத்திற்கு போகலாம்

நாமக்கல் டூ அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் இரும்பு கலக்காத மணிகள்.!