உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் தெப்ப திருவிழாவானது கடந்த 10 நாட்களாகவே நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் தைப்பூச பெளர்ணமி தினத்தில் தெப்ப உற்சவம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வை தொடர்ந்து காலை சுவாமியும், அம்மனும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி 2 முறை தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்
அதேபோல் இரவும் தெப்பக்குளம் முழுவதும் விளக்கேற்றியும், நீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் உற்சவர், அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்
மேலும் பாரம்பரிய முறைப்படி அனுப்பானடி பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பெரியவர்கள் முதியவர்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக அழைத்து வரப்பட்டு வடத்தை இழுத்தனர்
இந்நிகழ்வை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இப்பகுதியில் திரண்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்