விருதுநகருக்கு கண்ணாடி ரயில்... கொல்லம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்.!

Scribbled Underline

தென்தமிழகத்தில் மதுரைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய இரயில்வே சந்திப்புகளில் ஒன்று விருதுநகர். மதுரை தாண்டி தெற்கு நோக்கி செல்லும் பெரும்பாலன ரயில்கள் விருதுநகரில் நின்று செல்லும் 

இந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்காக மதுரை கொல்லம் இடையே இயக்கப்பட உள்ள கண்ணாடி மேற்கூரைகளை கொண்ட விஸ்டோடோம் என்ற ரயிலுக்கு விருதுநகர் நிறுத்தம் வழங்கப்பட்டு உள்ளது

இயற்கை எழில்மிகு செங்கோட்டை - புனலூர் வழித்தடத்தில் உள்ள பாலங்கள், குகைகள், வனப்பகுதிகளை காண ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில், தற்போது அவர்களை கவர்வதற்காக மதுரை - கொல்லம் வழித்தடத்தில் இந்த இரயில் இயக்கபட உள்ளது

இந்த ரயிலின் ஹை லைட்டே கண்ணாடி தான். இயற்கை வனப்பை ரயிலில் பயணித்த படி ரசிக்கும் வகையில் ரயிலின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கும் இந்த இரயிலின் சோதனை ஓட்டம் தற்போது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

இந்த தீவுக்கு வந்தால் வீடு, நிலம் இலவசம்...

ஜிம்மில் கெத்து காட்டிய 80 வயது பெண்மணி...

மனிதனின் எலும்பையே முறிச்சிடும்.. அபாயகரமான நாய்

More Stories.

விரைவில் இரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதனால் விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட இரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இறைச்சிகளுக்கு இணையான சத்துமிகுந்த 10 சைவ உணவுகள்.!