பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கு இந்த மலையாள நடிகை தான் ஜோடியா.? 

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு நடித்த ‘கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்

இயக்கிய முதல் படமே இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதன் பின், இடைவேளைக்கு பிறகு ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் அந்த படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்தார்

இன்றைய இளைஞர்களின் காதலை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்தது. மக்கள் படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர்

மேலும் இளசுகள் பலரும் பிரதீப் ரங்கநாதனுக்கு தீவிர விசிறியாக மாறினார்கள். தான்  இயக்கி நடித்த இரண்டாவது படத்தின் மூலம் பலரையும் தன் பக்கம் ஈர்த்தார் பிரதீப்

லவ் டுடே படத்தை தொடர்ந்து இவருக்கான மவுசு எகிற பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து குவிந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார் பிரதீப்

மேலும் இயக்குனர் அஸ்வத் இயக்கி வரும் டிராகன் படத்திலும் நடிக்கிறார். இப்படி படங்களில் பிசியாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு மேலும் ஒரு பட வாய்ப்பு கிட்டியுள்ளது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுதாகொங்குராவுக்கு அசிஸ்டண்டாக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கமிட்டாகியுள்ளார்

மேலும், இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா? படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்ஷேஷன் நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

இவர்களது ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

next

தனுஷ் பட நடிகைக்கு விரைவில் கல்யாணமா.? வைரல் போட்டோ.!