திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழகான மலையாக மாஞ்சோலை உள்ளது
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அற்புதமான களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைகள் கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றன
தேயிலை தோட்டங்கள் நிறைந்து காணப்படும் இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிக்கிறது
திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில் உள்ள இந்த மாஞ்சோலை மணிமுத்தாறு நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ளது
மாஞ்சோலை அதன் அழகான வானிலைக்கு புகழ் பெற்றது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மாஞ்சோலை மலை உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசமாக விளங்கும்
நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடு ஆகியவை உள்ளன. இந்த மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் வழியாக நாம் நடந்து சென்றாலே ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசிக்க முடியும்
அமைதியான சூழ்நிலையில் தங்க விரும்பும் அனைவரும் நிச்சயம் காண வேண்டிய இடமாக இந்த மாஞ்சோலை விளங்குகிறது
மாஞ்சோலை சுமார் 1162 மீட்டர் உயரத்தில் உள்ள மலை ஆகும். இந்த இடம் தேயிலைத் தோட்டங்களுக்குப் பிரபலமானது, அவற்றில் பம்பாய் பர்மா தேயிலைத் தோட்டம் மிக முக்கியமானது
அதன் அழகிய அழகு காரணமாக, இந்த இடம் ஊட்டிக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி ஆகியவற்றை வரும் வழியில் கண்டு மகிழலாம்
இவற்றுடன் மலைக்கு மேலே கண்டு ரசிக்கக் கோதையாறு, குதிரைவெட்டி, நாலுமுக்கு மற்றும் ஊத்து போன்ற இடங்களும் உள்ளன. இங்கு செல்ல வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் கூறும் கட்டுப்பாட்டின் பெயரிலேயே சுற்றுலா பயணிகள் சென்று வர முடியும்