மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலய வெண்ணைத்தாழி திருவிழா... என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

தட்சிண துவாரகை என்ற பெயர் பெற்றதும் வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமான வாய்ந்த திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு ஶ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனிப்பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது

அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா, கடந்த மார்ச் 27 ஆம் நாள் பெருமாள் சன்னதியின் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கருடன் சின்னம் வரையப்பட்ட கொடியேற்றத்துடன் தொடங்கியது

அதனை தொடர்ந்து ஒவ்வொரு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தினம்தோறும் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது

இதில் வெள்ளி அம்ச வாகனம், பஞ்சமுக ஹனுமான் சேவை, பேரண்டபட்சி வாகனம், புஷ்ப பல்லக்கிலும், ரிஷியமுக பர்வதம் வாகன சேவையும், சிம்ம வாகனத்திலும், தினமும் இரவு சுவாமி புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

இந்நிலையில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான புகழ் பெற்ற வெண்ணைத்தாழி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

வெண்ணைத்தாழி திருவிழாவில் முக்கிய நிகழ்வில் சுவாமி நவநீத சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்

பல ஹோட்டல்களில் ஏன் 13 நம்பர் ரூம் இருப்பதில்லை தெரியுமா?

அதிக சம்பளம்... ஆனால் யாருக்கும் ஆர்வமில்லை... உலகளவில் யாரும் செய்ய விரும்பாத வேலைகள்!

கிராமமே ஐஏஎஸ் அதிகாரிகள்.. எங்கு இருக்கு தெரியுமா?

More Stories.

கையில் வெண்ணைய் குடத்தை ஏந்தி தவழும் கண்ணனாக வந்த ராஜகோபாலனின் அலங்காரங்களை கண்டு பக்த்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்

பக்தர்கள் சுவாமி மீது வெண்ணையை அடித்து கோபாலா, கோபாலா என பக்தி கோஷம் எழுப்பி வழிபாடு செய்தனர்

இதில் திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானனோர் வழிபாடு செய்தனர்