மாசி மகாசிவராத்திரி திருவிழா... நான்காம் நாள் தங்க கேடயத்தில் எழுந்தருளிய சுவாமி அம்பாள்.!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மாசி மகாசிவராத்திரி திருவிழா நான்காம் நாளை முன்னிட்டு தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி வந்து சுவாமி அம்பாளை வழிபட்ட பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கிவரும் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகாசிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாணம் விமர்சியாக நடைபெறும்

கோவிலில் கொடியேற்றப்பட்டு மாசி மகாசிவராத்திரி திருவிழாவானது தொடங்கி மூன்றாம் நாள் திருவிழாவின் நிகழ்ச்சியாக கோவில் நடை சாத்தப்பட்டு சுவாமி - அம்பாள் மண்டகப்படிக்கு கெந்தமாதன பர்வதம் சென்று வந்த பின் கோவில் நேற்று இரவு நடை மீண்டும் திறக்கப்பட்டது

இந்நிலையில், நான்காம் நாள் திருவிழாவினை முன்னிட்டு காலையில் ராமநாதசுவாமி - பர்வதத்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்ககேடயத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி நான்கு ரத வீதிகளிலும் சுற்றி பக்தர்கள் காட்சி அளித்தனர்

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

நான்கு ரத வீதிகளில் வந்த சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள், பக்தர்கள் வணங்கி சென்றனர்